Templates by BIGtheme NET

ஜுலி ஓவியாவுக்கு செய்த துரோகத்திற்க்கு பதிலடி கொடுத்த ஆர்த்தி!

உலகநாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தி பங்கேற்றார். நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்தே தனக்கு உரித்தான குறும்புத்தனங்களோடு, ‘பிக்பாஸ்’ வீட்டில் இருந்த சக போட்டியாளர்களுடன் பழகி வந்தார். இதன் பின்னர் அடுத்தடுத்த நாட்களில் சீரியஸ் மோடுக்கு மாறினார்.

இவரது பாய்ச்சிலில் முதலில் சிக்கியவர்  ஜூலி. அவரை குறிவைத்து பல நேரங்களில் தாக்கி பேசி ரசிகர்களிடம் அடிக்கடி திட்டுகளை வாங்கிக் கொண்டார் ஆர்த்தி. தொடர்ந்து ஜூலியை டார்கெட் செய்து போலியாக பழகுவதாகக் குற்றஞ்சாட்டி பரபரப்பு ஏற்படுத்தினார்.

இதுமட்டுமில்லாமல் சக போட்டியாளர்களிடமும் அவ்வப்போது சண்டை இழுப்பதும், சமாதானம் ஆவதுமாக இருந்தார். இதைத் தொடர்ந்து கடந்த வாரம் ‘பிக்பாஸ்’ வீட்டை விட்டு வெளியேறுவோரின் பட்டியலில் ஆர்த்தி பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்த்தி இரண்டு வாரத்திற்கு முன்னரே வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்ததில் இருந்து நிகழ்ச்சி குறித்து தன்னுடைய கருத்தை டுவிட் செய்து வந்திருந்தார்.

இந்த நிலையில் நிகழ்ச்சியில், ஓவியா திடீரென மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படும் நிலையில் ஜுலி, ஒரு நர்ஸாக இருந்து கொண்டு என்னால் ஓவியாவுக்கு உதவி செய்ய முடியவில்லை என்று வருத்தமாக இருப்பதாக கூறினார்.

இதனை பார்த்த நடிகை ஆர்த்தி, ஓவியாவுக்கு உதவி செய்ய நர்ஸா இருக்க வேண்டியதில்லை, மனிதத்தன்மை இருந்தால் போதும் என அதிரடியாக ஒரு பேட்டியில் பதில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*