Templates by BIGtheme NET

ஜூலிக்கு இந்த அவமானம் தேவையா – நேற்று என்ன நடந்தது என்று தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் ஜுலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதும் மக்களிடையே ஆரம்பத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்துது.

ஆனால் போட்டி தொடங்கிய சில நாட்களிலேயே ஜூலியின் சுயரூபம் மக்களிடையே வெளுக்க தொடங்கியது. ஆரம்பத்தில் வீட்டில் இருந்த அனைவரும் ஜுலியை ஒதுக்கிய நிலையில் பரணி மட்டுமே ஆதரவாக இருந்தார்.

ஆனால் மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டு ஜுலி பரணியை ஒதுக்கியதால் மக்கள் ஜூலியின் மேல் கடும் கோபத்தில் இருந்தனர். ஜூலி தொடர்ச்சியாக நாமினேட் செய்யப்பட்டாலும் ஜூலியை விட ஆர்த்தி வெளியேற்றப்பட வேண்டிய அளவிற்கு மக்களிடம் வெறுப்பை சம்பாத்திருந்ததால் அந்த வாரம் ஜுலி தப்பித்துக்கொண்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஜுலியை அனைவருமே ஒதுக்கினாலும். ஜுலிக்கு ஆதரவாக இருந்த ஒரே நபர் ஓவியா மட்டும் தான். ஆனால் ஜுலியின் சினிமா ஆசைக்கு ஆதரவு வேண்டும் என்பதால் காயத்ரி மற்றும் சக்தியின் ஆதரவை பெறுவதற்காக ஜூலி ஓவியாவிற்கு எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டது ரசிகர்களிடையே ஜூலியின் மேல் பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்தவாரம் ஜூலி நாமினேட் செய்யப்பட்டதால் மக்கள் ஜூலிக்கு எதிராக வாக்களித்து நேற்று ஜூலி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். வெளியில் வந்த ஜுலியை அவரது நெருங்கிய நண்பர்களே ஒதுக்க தொடங்கினர். மேலும் அவரது அக்கம்பக்கத்தினர் ஜூலியின் குடும்பத்திற்கு எதிராக ஜாடைமாடையாக பேசியது ஜூலிக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது.

பரணிக்கு எதிராக செய்த துரோகத்தால்தான் தான் ஒதுக்கபடுகிறோம் என்பதை உணர்ந்த ஜுலி நேற்று பரணியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். வந்திருப்பது ஜூலி தான் என்று அங்கிருபவர்கள் அறிந்துகொண்டதால் பரணி ஜூலியை காப்பாற்றி அங்கிருந்து வெளியேற்றி மீண்டும் தனது நன்மதிப்பை உயர்த்திக்கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*