Templates by BIGtheme NET

மேஷ ராசிக்கு குருப்பெயர்ச்சியினால் இவ்வளவு பலன்களா – அவசியம் படிங்க!


கடந்த செப்டம்பர் மாதம் 2-ம் தேதியன்று குருப்பெயர்ச்சி நிகழ்ந்தது. இதுவரை யாரும் கணித்திடாத வகையில் மிகத் துல்லியமாக குருப்பெயர்ச்சி பலன்களை கணித்து சொல்ல வேண்டும் என்று இத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டு குருப்பெயர்ச்சி பலன்களையும் உங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களிலிருந்து விடுபட நீங்களாகவே செய்துகொள்ள பரிகாரங்களையும் கணித்து சொல்லியிருக்கிறார் சேலத்து ஜோதிட வல்லுநர் திரு பாலாஜி ஹாசன் அவர்கள். இதன்படி இன்று முதல் அடுத்த பன்னிரண்டு நாட்களுக்கு ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள் தொடர்ந்து வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்பான மேஷ ராசி அன்பர்களே நடந்து முடிந்திருக்கும் குருப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு மிகவும் யோககரமான பலன்களை வாரிவழங்கப்போகிறார்.

மேஷ ராசிக்கு சப்தம வசீகர ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 7-ம் வீட்டில் குரு அமர்ந்திருக்கிறார் எனவே மேஷ ராசிக்காரர்கள் அடுத்த செப்டம்பர் 21 வரை மிகச்சிறந்த வளர்ச்சியை அடைவார்கள், நீங்கள் தொட்ட காரியங்கள் வெற்றிபெரும். மேஷ ராசிக்காரர்களின் தாய்க்கு இதுவரை ஏற்பட்டிருந்த உடல்நலம் சார்ந்த பிரச்சனைகள் விரைவில் குணமடையும். விரும்பிய பொருட்களை வாங்கும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பொதுவாக குருபகவான் முயற்சிக்கான கிரகம் எனவே குருபகவான் சாதகமாக இருந்தாலும் கூட எந்த ஒருவிஷயத்திற்கும் நீங்கள் முயற்சிகளை மேற்கொண்டால் இந்த காலகட்டத்தில் நிச்சய வெற்றியை அடையலாம். குருபகவான் சாதகமான ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் நீங்கள் முயற்சி மேற்கொண்டால் வீடு, நிலம், வாகனம் உள்ளிட்ட சொத்துக்களை நிச்சயம் சேர்ப்பீர்கள். சுயஜாதகத்தில் திருமண தடை இல்லாத இதுவரை முயற்சி செய்தும் திருமணம் ஆகாத மேஷராசி ஆண், பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் முயற்சி மேற்கொண்டால் நிச்சயம் திருமணம் நடக்கும். இந்த காலகட்டத்தில் நண்பர்களால் நன்மை ஏற்படும், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் நலமடைவார்கள். எழுத்து பேச்சு செயல்திறன் ஆகிய அனைத்தும் இந்த காலகட்டத்தில் சிறப்பாக அமையும்.

பயணம் தொடர்பான காரியங்களில் அனுகூலங்கள் ஏற்படும். இந்த காலகட்டத்தில் செய்யும் முதலீடுகள் பெருகும். லக்கினத்தின் இரண்டாம் இடமான 11-ம் இடத்தை ராகு பார்பதால் அபிவிருத்தி ஏற்படும், எனவே இந்த ஒரு ஆண்டு நீங்கள் பணம் சம்மந்தப்பட்ட எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அது அபிவிருத்தி ஆகும். இந்த காலகட்டத்தில் உயர்படிப்பு பதிப்பதற்கான முயற்சி எடுத்தவர்களுக்கு நிச்சயம் அனுகூலம் ஏற்படும். மேஷ ராசி குடும்பத் தலைவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் உடன்பிறந்தவர்களின் உதவிகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் பிள்ளைகள் உங்கள் மனம் அறிந்து செயல்படுவார்கள். இதுவரை குடும்பத்துடன் செலவிட நேரம் இல்லாமல் ஓடி ஓடி உழைத்த உங்களுக்கு இனி உங்கள் குடும்பத்துடன் செலவழிக்க நேரம் அமையும். இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானங்களை ஒரு தொகுப்பாக சேமிப்பீர்கள். பனி நேரம் போல ஒய்வு நீங்களில் மற்றொரு தொழிளிலேயோ, பகுதி நேர வேலையோ செய்வீர்கள். இந்த காலகட்டத்தில் கோடைவாசஸ்தலங்களுக்கு சுற்றுலா மேற்கொள்வீர்கள். மேஷராசியின் விரய ஸ்தானத்தை கேது பார்பதால் சுப விரையங்கலான கோயில் சுற்றுலாக்களை மேற்கொள்வீர்கள். திருமணத்திற்கு காத்திருக்கும் ஆண் பெண்களுக்கு திருமணம் தடபுடலாக நடைபெறும்.

இந்த காலகட்டத்தில் கண் காது மூக்கு தொடர்பான உடல்நல பாதிப்புகள் தொடை தொடர்பான பாதிப்புகள் ஏற்படும் இதில் கவனமாக இருந்துகொள்வது நல்லது. இந்த ஆண்டில் கையில் காசிருந்தால் வெள்ளி தங்கம் உள்ளிட்ட பொருட்களில் நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளலாம் இல்லையென்றால் சேமிப்புகள் ஏற்கனவே கூறியது போல உடல்நலம் தொடர்பான காரியங்களுக்கு செலவாகலாம். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். குரு சந்திர லக்கினத்தை பார்ப்பது சிறப்பான பலனாகும்.

பொதுவாக குரு முழுமையான சுப கிரகம் இவருக்கென்று பகை கிரகங்கள் எதுவும் கிடையாது. எனவே குருவின் பார்வை முழுமையாக உங்களுக்கு கிடைப்பதால் நல்ல பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைத்தால் தவறாமல் சென்றுவாருங்கள் நிச்சயம் பெரிய வெற்றி கிட்டும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் முழு வெற்றியடையும். இந்த காலகட்டத்தில் புது மொபைல் வாங்கக்கூடிய யோகம் உண்டு.

அஸ்வினி நட்சத்திரகாரர்களுக்கு 25.09.2017 முதல் 06.12.2017 நேரம் மிக அனுகூலமாக இருக்கிறது. 07.03.2018 முதல் 04.07.2018 வரை நேரம் மிக அனுகூலமாக இருக்கும்.
07.12.2017 முதல் 07.03.2018 வரை கொஞ்சம் பாதகமான காலம் நிலவுகிறது இந்த நேரத்தில் உடல்நலம் சிறிது பாதிக்கும், கையெழுத்துகளை பார்த்து யோசித்து போடவும். 05.07.2018 முதல் 01.09.2018 வரை சிறிது பாதகமான காலமாக இருக்கிறது.

பரணி நட்சத்திரகாரர்களுக்கு 06.10.17 முதல் 09.11.17 சாதகமான காலகட்டமாக அமையும், 01.02.18 முதல் 03.0518 சாதகமான காலகட்டமாக அமையும்
01.10.17 முதல் 12.01.18 வரை சிறிது பாதகமான காலகட்டமாகும்,03.04.18 முதல் 06.06.18 வரையும் 09.08.17 முதல் 09.01.18 வரையும் சிறிது பாதகமான காலமாகும்.

கார்த்திகை நட்சத்திரகாரர்களுக்கு 26.09.17 முதல் 06.12.17 வரையிலும் 07.03.18 முதல் 04.07.18 வரை மிகவும் சாதகமான காலமாகும்,
12.09.17முதல் 06.11.17 வரையிலும் 27.12.17 முதல் 11.03.2018 வரையிலும் 28.05.18 முதல் 05.19.18 வரை பாதகமான காலகட்டமாகும்

பாதகமான காலகட்டத்தை குறித்து பெரிதாக பயப்பட வேண்டாம், வாகனங்களில் பயணிக்கும்போது ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுவது, சீட் பெல்ட் போட்டு வண்டி ஓட்டுவது, வேலையில் சிரத்தையாக ஈடுபடுவது, பிறருக்கு பணத்தை தரும்போது எண்ணி பார்த்து தருவது எண்ணி பார்த்து வாங்குவது உள்ளிட்ட விஷயங்களை கவனமாக இருந்தாலே பொதும்.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு ப்ரொமோஷன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. சிலருக்கு வேலையிருந்து வெளியேறி வேறு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் ஜாமீன் கையெழுத்து யாருக்கும் போடவேண்டாம் சனி சிக்கலில் சிக்கவைத்துவிடுவார்.

அரசு உத்யோகிகஸ்தர்களுக்கு உத்தியோக உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட விஷயகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

பெண்களை பொறுத்தவரை திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும், ஹார்மோன் பிரச்சனைகள் குணமாகும்.

ஆண்களுக்கு தைரியம் அதிகரிக்கும், மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும், முயற்சிகளை மேற்கொண்டால் சிறப்பான மதிப்பெண்களை பெறலாம், சுய தொழில் மேற்கொள்பவர்களுக்கு சிறப்பான காலகட்டம் இது பெரிய வெற்றி கிடைக்கும். இந்த ஒருவருடத்தில் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ சம்பாத்தித்துக்கொள்ளுங்கள் அவ்வளவு சிறப்பான காலகட்டம் இது. அரசியல்வாதிகளுக்கு இது சிறப்பான காலகட்டமாகும் அரசியலில் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். தினக்கூலி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இந்த வருடம் எவ்வளவு நாட்கள் வேலைக்கு செல்ல நினைக்கிறீர்களோ அத்தனை நாட்களும் உங்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி வேலை செய்பவர்களுக்கு இது மிக லாபகரமான காலகட்டமாக அமையும், வழக்கறிஞர்களுக்கு பெரிய வழக்குகள் கிடைக்கும் வழக்குகளும் வெற்றிகரமாக அமையும், இஞ்சினியரிங் வேலையில் இருப்பவர்களுக்கு இக்காலகட்டம் சிறப்பாக இருக்கிறது, மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல காலகட்டம் இது எனவே மேற்படிப்பு படிக்க நினைப்பவர்கள் படிக்கலாம், கிளினிக் வைக்க நினைப்பவர்கள் உங்கள் சுய ஜாதகத்தில் தொழிலில் ஏதும் பிரச்சனை இல்லாவிட்டால் நிச்சயம் வைக்கலாம், விவசாயிகளுக்கு அற்புதமான காலகட்டம் இது இந்த நேரத்தில் உங்களுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும், மார்கெட்டிங் தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான காலகட்டமாக அமையும், வெண்டார்களுக்கு சிறப்பான காலகட்டம், வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நேரம் நன்றாக இருக்கிறது, ப்ரோக்கர் தொழில் செய்பவர்களுக்கு இது கொஞ்சம் அனுகூலமான காலகட்டம் எனவே இந்த காலகட்டத்தில் கவனமாக தொழிலில் ஈடுபடுவது நல்லது.

இந்த காலகட்டத்தில் மேஷராசி அன்பர்கள் துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்ளலாம் நிச்சயா வெற்றி கிடைக்கும். வாழ்த்துகள்.

ஜோதிட வல்லுநர் பாலாஜி ஹாசன் அவர்களின் முகநூல் முகவரி – https://www.facebook.com/balajihaasan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*