Templates by BIGtheme NET

மருத்துவமனையில் ஓவியா? ரசிகர்களால் கதிகலங்கும் மருத்துவமனை நிர்வாகம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளரான ஓவியாவிற்கு ஆரவிற்கும் இடையிலான காதல் பிரச்சனையில் ஓவியா மனதளவில் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேற விரும்பி அவர் வெளியேற்றப்படாததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் இதன் பின் அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க  பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் நடிகை ஓவியா மருத்துவரை சந்திக்க விரும்பியதால் அவர் ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஒரு புகைப்படத்துடன் தகவல் பரவியது.

இந்த தகவலை அறிந்த ஓவியா ரசிகர்கள், அந்த மருத்துவமனைக்கு தொடர்ந்து போன் செய்து விசாரித்து வருகின்றனர். உண்மையில் ஓவியா அந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப்படவில்லை என்றாலும் ரசிகர்கள் ஓவியாவை சந்திப்பதற்காக மருத்துவமனைக்கு நேரிலும் தொலைபேசியிலும் அழைத்தவண்ணம் உள்ளனர்.

தொடர்ந்து ஆயிரக்கணக்கில் வந்த போன் கால்களுக்கு ‘இல்லை’ என பதில் சொல்லி புரியவைப்பதற்குள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு பெரும்பாடாகிவிட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஓவியா மருத்துவமனையில் உள்ளதாக புகைப்படம் ஓவியா நடித்த புலிவால் படத்தில் வரும் காட்சி என்றும் விஷமிகள் யாரோ வதந்தியை பரப்பியுள்ளதாகவும் ரசிகர்கள் பயப்பட தேவையில்லை என்று ஓவியாவின் நலன்விரும்பிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*