Templates by BIGtheme NET

உடல் பருமனை குறைக்க இயற்கை வழிமுறைகள்

உடல் பருமனை குறைக்க என்ன செய்வது என்பது தான் இன்றைய இளைஞர்களில் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது.  உடல் பருமனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே இயற்கையான முறையில் குறைக்க முடியும்.

  • பூண்டு (2 பல்), ஓமம் (கால் ஸ்பூன்), மிளகு (3) – மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் புழு சாகும்;கொழுப்பு கரையும்; உடல் பருமன் தீரும்.
  • வெந்தயம், சுண்டைக்காய் வற்றல், மிளகு – தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து, தினமும் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
  • முட்டைக்கோசுடன் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி 48 நாட்களுக்கு காலை உணவாகச் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
  • பப்பாளிச் சாறை தினமும் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்.
  • நாரத்தம் பிஞ்சை வேகவைத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
  • துளசிச் சாறு, எலுமிச்சம் பழச் சாறு – இரண்டையும் சேர்த்து சூடாக்கி அதில் தேன் கலந்து குடித்தால் உடல் பருமன் குறையும்.
  • துளசிச் சாறில் தேன் கலந்து குடித்தால் உடல் பருமன் குறையும்.
  • இஞ்சிச் சாறை பாலில் கலந்து குடித்தால் வயிறு தொடர்பான பாதிப்புகள் தீரும். உடலும் இளைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*