Templates by BIGtheme NET

ஜாமீனில் வந்த ஹாசினி கொலைகாரன் தனது தாயை கொன்றுவிட்டு தப்பியோட்டம்!

சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற கொலையாளி தஷ்வந்த் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்தான், தஷ்வந்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தன்னை பெற்றெடுத்த தாயாரையே கொடூரன் தஷ்வந்த் இரும்பு ராடால் அடித்து கொன்றுவிட்டு தப்பியோடியிருக்கிறான்.

ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் வேலையின்றி வீட்டிலேயே இருந்திருக்கிறார், அவ்வப்போது செலவிற்கு பணம் கேட்டு தனது பெற்றோரை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று (சனிக்கிழமை) காலை அவனது தந்தை வேலைக்குச் சென்றுவிட தனது தாயார் சரளாவிடம், செலவுக்கு பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான்.

தாயார் பணம் தர மறுக்கவே அவரை இரும்பு ராடல் அடித்து கொன்றுவிட்டு அவர் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டில் இருந்த நகை பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தலைமறைவாகியிருக்கான்.

இதுதொடர்பாக அவரது தந்தை சேகர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*