Templates by BIGtheme NET

இதுவரை ஏற்று நடிக்காத வேடத்தில் நடிக்கவுள்ள விஜய்!

விஜய் தற்போதெல்லாம் நாட்டில் நடக்கும் விடயங்களை தன் படங்களின் மூலம் வெளிப்படுத்துகின்றார்.

பைரவா படத்தில் மருத்துவ கல்லூரிகளின் ஊழல் குறித்தும், மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. குறித்தும், கத்தி படத்தில் அலைக்கற்றை ஊழல் விவசாயிகள் பிரச்சனை என்று சமூக கருத்துள்ள படங்களை தொடந்து கொடுத்து வருகிறார்.

இவை மக்களின் மத்தியில் பெரும் சர்ச்சையும் உருவாக்குகின்றது. இது ஊடகங்களில் ஒரு பேசுப்பொருளாகவும் மாறுகின்றது.

இந்த நிலையில் விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளது அனைவரும் அறிந்தது தான்.

இப்படத்தில் இவர் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக முருகதாஸே கூறினார்.

இந்நிலையில், தளபதி விஜய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் எனவும், அதில் ஒன்று தான் இதுவரை ஏற்று நடிக்காத வேடமான மாற்றுத்திறனாளி வேடத்தில் நடிக்கவுள்ளார் எனவும் தகவல் பரவி வருகின்றன.

இந்த தகவல் குறித்து படக்குழு மௌனம் காத்து வருகின்றது.

மேலும், விஜய் முதன் முதலாக மாற்றுத்திறனாளி வேடம் ஏற்று நடிக்கவுள்ள தளபதி 62 படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே எகிறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*