Templates by BIGtheme NET

அஜித்தின் அடுத்த படம் குறித்து வெளியான சூப்பர் தகவல் – துள்ளி குதிக்கும் ரசிகர்கள்!

அஜித் படங்கள் என்றாலே தல ரசிகர்களுக்கு திருவிழா தான், இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த விவேகம் வசூல் ரீதியாக வெற்றியடைந்தாலும், ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை.

இதனால் தல அஜித் ரசிகர்கள் அனைவரும் தல-58 படத்தின் அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து இந்த படத்தையும் சிறுத்தை சிவாவே இயக்க இருப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது. அஜித்திற்கும் சிவாவிற்கும் இடையே இருக்கும் புரிதலால் அடுத்து ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்று இந்த கூட்டணி தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள சூப்பர் தகவல் என்னவென்றால் அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய அடுத்த படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைல் இல்லாமல் உடலை குறைத்து  இளமையான தோற்றத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாராம்.

இதனை அறிந்த தல ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*