Templates by BIGtheme NET

மெர்சல் விஜய்யை கலாய்க்கும் அண்ணன் தம்பி கலை வாரிசுகள் யார் தெரியுமா?

மெர்சல் இரண்டு தரப்பு விமர்சனம் பெற்றாலும் படம் மிக பெரிய வசூல் மழை பொழிகிறது குறிப்பாக பாஜகவின் விமர்சனத்திற்கு பிறகு படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையைகிளப்பி வருகிறது.

இந்த சூழ்நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் அவர் தம்பி பிரேம்ஜி இருவரும் விஜய்யின் மெர்சல் படத்தை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அண்ணன் வெங்கட் பிரபு தனது ட்வீட்டில் படம் சிறப்பாக இருக்கிறது பஞ்சு அருணாச்சலத்திற்கு நன்றி சொல்லுங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். பஞ்சு அருணாச்சலம் அபூர்வ சகோதரர்கள் படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது தம்பி பிரேம்ஜி விஜய் தன ஸ்டைல் காப்பி அடித்துள்ளதாக கூறியுள்ளார். ஆம் இரண்டாம் பாதியில் தந்தை வேடத்தில் வரும் விஜய் நித்யா மேனனுடன் ஒரு சீனில் பிரேம்ஜியின் ஸ்டைலை போல ஒரு காட்சி வரும் ஆனால் அது ஸ்டைலுக்காக காட்டப்பட்டதல்ல ஒரு ஜான் என்று குறிப்பிடுவது போல் காட்டியிருப்பார்.

இதனை பற்றி பிரேம்ஜி தற்போது அவரது ட்விட்டரில் தளபதி விஜய் செய்திருப்பது என்னுடைய ஸ்டைல் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இதன் பின் விஜய் ரசிகர்களின் கடுமையான எதிர்ப்பை தாங்க முடியாமல் அந்த பதிவை நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*