Templates by BIGtheme NET

என்ன ஆனது ஓவியாவிற்கு ஓவியாவின் நிலவரம் இதுதான்!

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி பிக்பாஸ். தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் இதுபோன்று எந்த நிகழ்ச்சிக்கும் இவ்வளவு ஆதரவு கிடைத்ததாக வரலாறில்லை.

அதிலும் இந்த நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளரான ஓவியா அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கப்படுகிரார். மற்ற பிக்பாஸ் போட்டியாளர்களான காயத்ரி, ஜூலி உள்ளிட்ட பலரின் தொந்தரவுகளை அசால்டாக சமாளிக்கும் ஓவியாவை ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஓவியாவிற்கு ஆரவிற்கும் இடையிலான காதல் பிரச்சனையில் ஓவியா மனதளவில் பாதிக்கப்பட்டு நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது போல் காட்டப்பட்டது ரசிகர்களை பேரு அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

ஓவியா தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற விரும்பியே இவ்வாறு செய்தார். ஆனால் ஓவியா பிக்பாசை விட்டு விலகிவிட்டால் நிகழ்ச்சியின் டிஆர்பி பாதிக்கும் என்பதால் விஜய் டிவி நிர்வாகம் ஓவியாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அவருக்கு அளிப்பதாக சொன்ன தொகையைவிட அதிகம் தருவதாக ஓவியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கிறது.

ஆனால் ஓவியாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஓவியாவை வீட்டிற்கு அழைத்து செல்வதில் உறுதியாக இருக்கிறார்களாம்.

விஜய் டிவியின் பேச்சுவார்த்தை பலித்ததா ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்கிறாரா என்று இன்று விடை தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*