Templates by BIGtheme NET

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த பிரபல நடிகை யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே!

அனைத்து வசதிகளுடன் கூடிய குட்டி சிறை போன்ற வீட்டில் பிக்பாஸ் போட்டியாளர்கள் 100 நாட்கள் அடைக்கப்பட்டு, உலகத்தில் இருந்து அப்பார்பட்டு, அதில் கலந்து கொண்டுள்ள மற்ற போட்டியாளர்களுடன் மட்டும் பேச முடியும். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கின்றார்.

தமிழ் பிக் பாஸ் போட்டியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு நபரை போட்டியிலிருந்து வெளியேற்ற தகுந்த காரணங்கள் கூறவேண்டும்.

அந்த நபர்களில் தங்களுக்கு பிடித்த நபருக்கு மக்கள் வாக்களித்து அவரை பிக் பாஸ் வீட்டில் இருக்க வாய்ப்பு கொடுக்கலாம். இந்த நிகழ்ச்சி தினமும் இரவு 9 மணிக்கு விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருகின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடியப்போகிறது. நேற்று சுஜா எலிமினேட் ஆனார். தற்போது 5 பேர் மட்டுமே மீதம் உள்ளனர்.

நேற்றைய நிகழ்ச்சியின் முடிவில் நடிகை ஒருவர் வீட்டுக்குள் நுழைவதைக்காட்டினர். ஆனால் அவரது முகம் காட்டவில்லை. அவரது கையில் பலூனுடன் உள்ளே வந்தார்.

அந்த பலூனை கவனிக்கையில் அதிலும் பலூன் என்ற எழுத்து உள்ளது. ஆகவே ஜெய் நடித்துள்ள பலூன் படத்தின் நாயகி அஞ்சலி அல்லது ஜனனி இருவரில் ஒருவர் தான் உள்ளே வந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*