புனேயில் 3 வயது சிறுவனை கண்மூடித்தனமாக அடித்த ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள அரசு பள்ளியில் கல்வி பயின்று வரும் 3 வயது சிறுவனை ஆசிரியை ஒருவர் கண்டித்துள்ளார். மேலும், கோபத்தின் உச்சிக்கே சென்ற ஆசிரியை சிறுவனை கண்மூடித்தனமாக தாக்கியதாக தெரிகிறது.
ஆசிரியை தாக்கியதில் சிறுவனின் கண்கள் வீங்கின. இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.