Templates by BIGtheme NET

கமலஹாசன் சொன்ன அந்த புது வரவு இவரு தாங்க! – கசிந்த தகவல்கள்

நேற்றைய நிகழிச்சியின் முடிவில் உங்களுக்கும் மகிழ்ச்சிகள் காத்து கொண்டு இருக்கின்றன, சில வரவுகள் வீட்டிற்குள் வரவிருக்கிறார்கள் என்று கமல் கூறினார்.

கமல் கூறிய உடன் பார்வையாளர்கள் பலத்த கை தட்டல்களுடன் ஓவியா ஓவியா என கத்த ஆரம்பித்துவிட்டனர். அதற்கு கமல் அளித்த பதில் “I Don’t Know” (எனக்கு தெரியாது). வரேன்னு ஒத்துகிறவங்க உள்ள வருவாங்க என்று கமல் கூறினார்.

அவ்வாறு வருபவர்களால் உள்ள இருக்கறவங்களுக்கு சந்தோஷமோ இல்லையோ, உங்களக்கு சந்தோசம் தான் என்றும் பொடி வைத்து கூறினார்.

வெளியே சென்று மீண்டும் உள்ளே வந்தால் பார்வையாளர்கள் சந்தோஷ படுவார்கள் என்றால் அது இருவர் தான், ஒருவர் ஓவியா மற்றொவருவர் பரணி.

ஓவியா வருவதற்கு பேச்சு வார்த்தை போய்க்கொண்டுள்ளது அதனால் அவர் இந்த வாரம் வரமாட்டார் என்று கூறுகிறார்கள். ஆனால், நடிகர் பரணி நிச்சயம் உள்ளே செல்வார் என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு ஒரு நல்லா திருப்புமுனையாக அமையும் என அவர் நம்புவதாகவும், இதனால் அவர் நிச்சயம் பிக்பாஸ் வீட்டிற்குள் பிரவேசிப்பார் எனவும் கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*